நம்மவர் குறுந்திரைப் படங்கள் ஒரு பார்வை - வைச்சாக் குடும்பி
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48 மணிநேர படபிடிப்பு போட்டியில் தயாரிக்கப்பட்ட “வச்சா குடும்பி” குறுந்திரைப்படத்தின் இணைப்பினை பலர் முகநூலில் பதிந்திருந்தனர். என்னடா பேரே வித்தியாசமாயிருக்கே என்ன தானிருக்கு என்டு பார்ப்பம் என்று யு – டியுப்புக்கு போனா….. 8 நிமிடங்களுள் பல டென்ஷன்கள் குறைஞ்சத போலதொரு பீலிங்…. இதையும் தாண்டியும் “வச்சா குடும்பி” பற்றி சில சொல்லியே ஆகவேண்டும். நேரடியான நகைச்சுவை படைப்பாக இல்லாது இருண்ட நகைச்சுவை (Dark Comedy) ரீதியிலான கதையமைப்பு முறையில் கருவை மையப்படுத்தி நகைச்சுவையை இரண்டாம் பட்சமாகவும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதானதொரு படைப்பு இது. இத் திரைப்படத்தின் பலமாக நான் கருதுவது இப்படத்தின் கருப்பொருள் மற்றும் திரைக்கதையமைப்பும் (மையப்) பாத்திர படைப்பும் ஆகும். இதன் கருப்பொருள் இன்று பொதுவாக உள்ள பிரச்சினையாகும். நிச்சயம் அண்ணன், தம்பி என்று எமக்கருகில் உள்ள ஒரு பாத்திரத்தின் உளப்பிரச்சினையை “வச்சா குடும்பி” வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. இளைஞர்களது “வழுக்கை விழல்” என்னும் இந்தப்பிரச்சினை பல இளைஞர்களின் ஆளுமையையும் ஆற்றலையும் மட்டுப்படுத்தும் பிரச்சினையாக இன்று ...