காட்டூன்கள் எதை காட்டுகின்றன?
எனக்கு சின்ன வயசிலிருந்தே பிடித்த விடயங்களில் ஒன்று காட்டூன் பார்ப்பது. இது சின்ன வயசோடயே நின்றிருந்தா பரவாயில்ல… ஆனா இப்ப ஏழு கழுத வயசான பின்னும் (ஒரு கழுதைக்கு என்ன வயசு என்டு கேட்கப்படாது) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பதுண்டு. முதல் நல்ல ஞாபகம் ரூபவாஹினியில 6 மணிக்கு ஒரு கோழிக்காட்டூன் போடுவாங்க… ஒரு கோழி தன்னுடைய நாலைந்து குஞ்சுகளை சிறகுக்குள்ள வச்சுக்கொண்டு அதுகள் நித்திரை கொள்வதற்கு கதை சொல்லும். அது காட்டூனாக ஒளிபரப்பாகும்… இந்த 6 மணி காட்டூன் பார்ப்பதற்காகவே சில முன்னாயத்தங்கள் செய்துடுவன். இல்லாட்டி சரியா நான் டீவிக்கு முன்னுக்கு போய் குந்த அம்மா கத்துவா ஹொம்வேக் செய்ய சொல்லி…. ஆதால ஸ்கூல் ஹோம்வேக்குகளை ஸ்கூல் விட்டு வந்தவுடனேயே மடமடவென்று செய்துவிடுவதுண்டு. பிறகு கொஞ்சம் வளர தொடங்கின நேரம் தான் சீடிகள் அறிமுகமானது… அந்த நேரத்தில டிவிசன் கிளாஸ்களும் வந்துட்டுது. டிவிசன் முடிஞ்சதும் அம்மா தான் என்ன ஏத்திப்போக வருவா… இனி என்ன பைக்கில ஏறி அம்மாவ கட்டிப்பிடிச்சிட்டு தொணதொணக்க தொடங்குவன்…. கடைசில என்ட அரிப்பு தாங்காம அம்மா காட்டூன் சீடி வாங்கித்தந்ததும...