Posts

Showing posts from November, 2013

அஸ்வர் எம்பியும் ஆவேஷப்பேச்சும்…… 15.11.2013

Image
ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த வேளை பின்னால் நின்று கொண்டிருந்த அஸ்வர் எம்பி அவர்கள் திடீரென கடுப்பாகி கத்தத்தொடங்கினார்…. “ வடக்கின் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசுகிறீர்கள்…. ஏன் சனல் 4 கூட இது தொடர்பான ஆவணப்படங்களை வெளியிடுகிறது… ஏன் முஸ்லீம்கள் பற்றி பேசக்கூடாது? முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் இரவோடிரவாக வெளியேற்றினார்கள். அதைப்பற்றி ஏன் பேசுவதில்லை… கிழக்கில் பல முஸ்லீம்களை வெட்டிச்சாய்த்தார்கள் அவர்கள் பற்றி ஏன் காட்சிப்படுத்தவில்லை. புலம்பெயர்ந்தவர்கள் சிலர் தான் இதை பின்னிருந்து இயக்குகிறார்கள்… இந்த மனித உரிமை பற்றி யார் கேட்கிறார்கள்?..... இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எல்லாவித சுதந்திரமும் இருக்கிறது…….. ” என்பதாக அமைந்திருந்தது. (இன்னும் இருக்கிறது அதை ஒலிவடிவில் இணைத்துள்ளேன்..ஆனால் இந்த ஒலிப்பதிவு ஊடக அமர்வுக்கு முன் கொடுத்த பேட்டியில் கிடைத்தது. இதே விடயத்தினை தான் ஆவேசமாக ஊடகவியலார் சந்திப்பில் தெரிவித்தார்) இல்லை தெரியாமல் தான் கேட்கின்றேன் “புலிகள் ஏன் உங்களை வெளியேற்றினார்கள்?” சும்மா ஒருவரை துரத்த அவர்க...

இன்றைய பொதுநலவாய மாநாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்........

Image
வினா – கடந்தகால போர்க்குற்றங்கள் மற்றும் இது தொடர்பிலான புலம்பெயர்ந்தவர்களது கருத்து பற்றி? விடை – புலம்பெயர்ந்தவர்கள் விரும்பினால் வந்துபார்க்கலாம்.யுத்தம் முடிவுற்று மிகக்குறுகிய காலத்துக்குள் நாம் பல அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். உங்களுக்கு தெரியுமா? தெற்கில் 2009 இற்கு முன் திடீர் திடீரென குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பல சவங்கள் வீதியில் போடப்பட்டன. வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. நாம் அப்போது புலிகளுடன் பேசத் தயாராகவிருந்தோம். ஆனால் நாட்டை பிளவுபடுத்த ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. வினா - இந்தியப்பிரதமர் வருகை தரவில்லையே… எவ்வாறு உணர்கின்றீர்கள்? விடை – மஹிந்த வாயை திறக்க முன் கமலேஷ் சர்மா…..) ஒருவர் பங்குபற்றவில்லை என்பதால் அவர் அவ்விடயத்தினை எதிர்ப்பதாக அர்த்தமில்லை. மஹிந்த – வெளிவிவகார அமைச்சர் எம்முடன் தானே இருக்கின்றார்.எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறது. வினா – பொதுநலவாயத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவுள்ள நீங்கள் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கவுள்ளீர்கள்? விடை – எனது சொந்த விருப்பின் பெயரில் செயற்பட முடியா...