அஸ்வர் எம்பியும் ஆவேஷப்பேச்சும்…… 15.11.2013
ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த வேளை பின்னால் நின்று கொண்டிருந்த அஸ்வர் எம்பி அவர்கள் திடீரென கடுப்பாகி கத்தத்தொடங்கினார்…. “ வடக்கின் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசுகிறீர்கள்…. ஏன் சனல் 4 கூட இது தொடர்பான ஆவணப்படங்களை வெளியிடுகிறது… ஏன் முஸ்லீம்கள் பற்றி பேசக்கூடாது? முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் இரவோடிரவாக வெளியேற்றினார்கள். அதைப்பற்றி ஏன் பேசுவதில்லை… கிழக்கில் பல முஸ்லீம்களை வெட்டிச்சாய்த்தார்கள் அவர்கள் பற்றி ஏன் காட்சிப்படுத்தவில்லை. புலம்பெயர்ந்தவர்கள் சிலர் தான் இதை பின்னிருந்து இயக்குகிறார்கள்… இந்த மனித உரிமை பற்றி யார் கேட்கிறார்கள்?..... இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எல்லாவித சுதந்திரமும் இருக்கிறது…….. ” என்பதாக அமைந்திருந்தது. (இன்னும் இருக்கிறது அதை ஒலிவடிவில் இணைத்துள்ளேன்..ஆனால் இந்த ஒலிப்பதிவு ஊடக அமர்வுக்கு முன் கொடுத்த பேட்டியில் கிடைத்தது. இதே விடயத்தினை தான் ஆவேசமாக ஊடகவியலார் சந்திப்பில் தெரிவித்தார்) இல்லை தெரியாமல் தான் கேட்கின்றேன் “புலிகள் ஏன் உங்களை வெளியேற்றினார்கள்?” சும்மா ஒருவரை துரத்த அவர்க...