
மரணித்துவிட்ட -நம்
காதலின் முதலாமாண்டு
நினைவஞ்சலி இன்று......
மதமெனும் மதம் கொண்டவர்கள்
மத்தியில் முதுகெழும்பில்லாமல்
புறமுதுகு காட்டி ஓடியவன் நீ
பெண்ணாயினும் போராடி
தோற்றவள் நான்
உனக்கு தெரியுமா? - நம்
காதலில் மன்னித்துவிடு – என்
உண்மைக்காதலில் - நான்
தோற்றாலும் பேடி நீ
என்னை மாற்றியிருக்கின்றாய்
பல வழிகளில்.......
பூவைக் கூட பறிக்க யோசிக்கும் - நான்
பலருடைய மனங்களை கூட – என்
வார்த்தைகளினால் புதைக்கின்றேன்
கடிக்கும் ஈயைக் கூட அடிக்காதவள் - என்
செயல்களினால் பலரின் உணர்வுகளைக் கூட
கொல்லத்தயங்குவதில்லை
மழைத்துளிக்கு ஒதுங்கும் - நான்
நனைகின்றேன் அடைமழையில் - என்
விழி ஈரம் யாரும்
பார்த்துவிட கூடாதென்று.....
என் குடும்பமே உலகம் - என்று
வாழ்ந்த நான் - இன்று
வெளியுலகத்தில் எனக்கென்று – ஒரு
சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கின்றேன்.
உன்னாலான இம்மாற்றங்கள் கூட
என்னை.....
தைரியசாலியாக
தன்னம்பிக்கை கொண்டவளாக
அடுத்தவர் நிமிர்ந்து பார்ப்பவளாக
செதுக்கியிருக்கிறது.
ஒருவேளை உன் கரம் பற்றியிருந்தால் - ஒரு
கோழைக்கு மனைவியாக வாழ்ந்திருப்பேன்
கடவுள் அருள் தப்பிவிட்டேன் - அன்று
என்னை நடுவில் விட்டோடிவிட்டாலும்
உனக்கு என் நன்றிகள் - நீ
தந்த வலிகளால் என்னை புடமிட்டதற்கு...
உன்னை பிரியும் வரை – உன்னை
கேள்வி கேட்டதில்லை – நான்
இன்று உன்னைப் பிரிந்து – ஒரு
வருட முடிவில் கேட்கின்றேன்....
என்னைச் செதுக்கிய – நீ
இந்த ஒரு வருடத்தில் சாதித்ததென்ன?
ஓரு குழந்தைக்கு மட்டும் தந்தையாகியிருக்கிறாய் - இன்றுவரை
ஒருவனுக்கு மாலையிடாவிட்டாலும்
தாய் தந்தையறியா பல குழந்தைகளுக்கு
தாயாக நான்....
No comments:
Post a Comment