Tuesday, September 11, 2012

பாதுகாப்பு கருத்தரங்கு – 2012



'போருக்கு பிந்திய ஐந்து காரணிகள்” என்ற கருப்பொருளில் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பாதுபாப்பு கருத்தரங்கு நேற்று ஆரம்பமாகியது. மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் 63 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
30 வருட போர் முடிவின் பின்னரான இலங்கையின் மீள் நிர்மாணம், மீள்குடியேற்றம், மீள்வாழ்வு, மீள்ஒருங்கிணைப்பு , மீளிணக்கம் என்ற ஐந்து விடயங்களை உள்ளடக்கியதாக “5சு” என்ற தலைப்பில் மேற் கூறப்பட்டவை பற்றி ஆராயப்பட தீர்மானிக்கப்பட்டது. நேற்றைய முதல் நாள் கருத்தரங்கில் மீள்குடியேற்றம் மற்றும் மீள்கடடுமானம் என்ற இரு காரணிகள் தொனிப்பொருளாக தேர்தெடுக்கப்பட்டிருந்தன. இதன் தொடக்க நிகழ்வாக முன்னாள் ஜெனரல் ஜே.ஜயசூர்ய வரவேற்புரையுடன் கருத்தரங்கினை ஆரம்பித்த வைத்தார்.அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மாநாட்டின் தலைமையுரையினை வழங்கினார்.

இரு கட்டங்களாக இடம்பெற்ற முதல் நாள் நிகழ்வில் முதற்கட்ட நிகழ்வில் போராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிறைவேற்றதிகாரி திரு.எஸ்.பி.தேவரட்னஈ மேஜர்.ஜெனரல்.எம்.ஹத்துருசிங்க, மேஜர்.ஜெனரல் ஜீ.டி.எச்.கே.குணரட்ண ஆகியோர் முறையே வடமாகாண , யாழ்மாவட்ட மற்றும் வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்கட்டுமானம், மீள்குடியேற்றங்கள் பற்றி விளக்கவுரையாற்றினர். இரண்டாம் கட்ட நிகழ்வில் “மீள் கட்டுமானம் ,மீள்குடியேற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பு” என்ற தலைப்பில் இந்திய மேஜர்.ஜெனரல் ஜீ.எஸ்.சேர்கில் இந்திய - இலங்கை நீண்ட கால தொடர்புகள் பற்றியும் இந்தியா மேற்கொள்கின்ற உதவிகள் பற்றியும் “சிவில் மற்றும் இராணுவத்தின் ஒருங்கிணைப்பு” என்ற தொனிப்பொருளில் ஓய்வுபெற்ற அமெரிக்க பிரிகேடியர் ருஷல் ஹாவட் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இறுதி நிகழ்வாக இலங்கையின் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்கட்டுமானம், மீள்குடியேற்றங்கள் பற்றி  இலங்கையின் சமூக சேவை அமைச்சு செயலாளர் திருமதி.இமல்டா சுகுமார் உரையாற்றியதை தொடர்ந்து முதல்நாள் நிகழ்வுகள் முடிவுபெற்றன.
இந்நிகழ்வின் போதான கலந்துரையாடலின் போது இலங்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறுபான்மை ஊழியர்களில் குறைந்தளவான பங்களிப்பு (20 வீதம்) பற்றியும் கோத்தபாயவின் உரையாடலில் விமர்சிக்கப்பட்ட விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பற்றியதான கருத்து முரண்பாடுகள் பற்றியும் இந்திய பிரதிநிதியினால் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு புலம்பெயர்ந்த மக்களினால் வெளிநாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் பற்றி தவறான கருத்துக்கள் வழங்கப்படுவதாகவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தழியோகத்தர்களை விடுதலைப்புலிகள் படுகொலை செய்தமையின் காரணமாக மக்களிடையே நிலவகின்ற அச்சமே அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைக்கப்படாமைக்கு காரணமென கோத்தபாய மழுப்பலான விளக்கமளித்ததுடன் இதனை சீர்செய்ய நீண்ட காலமெடுக்கும் எனவும்  தெரிவித்தார்.

“யுத்தத்தின் பின்னரான காரணிகள் “ என்ற தொனிப்பொருளை இம்மாநாடு கொண்டிருந்தாலும் விடுதலைப்புலிகளின் தமிழ் ஈழ பற்றே போருக்கு காரணம் என்ற கருத்தும் இலங்கை இராணுவம் எவ்விதமான அநீதிகளையும் சிறுபான்மையினருக்கு இழைக்கவில்லை என்ற கருத்தையும் வெளிநாடுகளுக்கு முன்வைப்பதாகவும் இலங்கை இராணுவத்தின் போர் தந்திரங்களை(???) விபரிப்பதாகவுமே  இம்மாநாடு அமைந்திருந்தது.

வடக்கு கிழக்கு மீள்குடியேற்றங்கள் பற்றியும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டது பற்றியும் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக நடவடிக்கைகள் பற்றியும் பேசப்பட்ட போது எத்தனை வீதம் தமிழ்மக்கள் தம் சொந்தவிடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள்? புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற போராளிகளில் எத்தனை வீதமானவர்கள் இன்று வாழ்வாதாரத்தை மேற்கொள்கிறார்கள்?  புதிய வர்த்தக நடவடிக்கைகளில் சிறுபான்மையினர் எத்தனை வீதம் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்? என்பது பற்றி வெளிநாட்டு பிரதிநிதிகள் கேள்வியெழுப்பவில்லை என்பதுடன் இவற்றிற்கான பதில்களும் அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை...

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை