அலுவலக தாமதத்தினை சரிசெய்ய
சன நெருசலை கூட
பொருட்படுத்தாமல் - பேருந்தில்
ஏறினேன்
ஊர்கின்ற பேரூந்து – என்
எரிச்சலை கூட்ட – என்னை
இரு கண்கள் துளைப்பதனை உணந்து
என் பார்வையை திருப்பினேன்...
கைகொள்ளா கருமையான
வாரப்பட்ட சுருள் முடி
அழுத்தமான சிவந்த உதடுகள்
பெண்மை நிறைந்த
மான் விழிகள் - என
அழகனாய் தான் இருந்தான் - அவன்
விழியின் பார்வை மட்டும் - என்
நெஞ்சைப் பார்ப்பதாக உணர – என்னை
அறியாமல் கையால் தடவி – பின்
குனிந்து பார்த்தேன் - ஏதாவது
என் இளமை தெரிகிறதா? என....
நெரிசல் ஒரு புறம் - அவன்
குத்தும் பார்வை ஒருபுறம் - என
அவஸ்தையாயிருந்தாலும் - அவன்
அருகில் போக வேண்டும் என்ற – என்
பெண்மைக்குரிய ஆவல் மட்டும்
அடங்கவேயில்லை..
தரிப்பிடங்களை தாண்டி
குறைந்துவிட்ட சனங்களிடையே
அவனை நோக்கி
மெல்ல நகர்ந்தேன் - எனது
அலுவலக தரிப்பிடத்தினை
சமீபிக்க – என்
கால்களில் கூட – புரியாத
ஒருவித வேகம்
அப்பாடா நெருங்கி விட்டேன் - என்
இன்றைய சங்கல்ப்பம் ஈடேறப்போகிறது – அவன்
கன்னங்களில் - ஒரு கிள்ளு
கைகளில் - ஒரு முத்தம்
எப்படியோ
சாதித்துவிட்ட திருப்தியில் - பேரூந்தை
விட்டிறங்கிய பின்பும்
திரும்பிப் பார்த்தேன் - என்
மனங்கவர் கள்வனை
அப்போதும் கண்கொட்டாமல் - என்
சட்டையின் - கரு நிற
பொத்தானை பார்த்துக் கொண்டிருந்தான் - தன்
பட்டுக்கைகளை அசைத்துக்கொண்டு – அந்த
சின்னஞ்சிறு மழலை.....
மீராபாரதி
சன நெருசலை கூட
பொருட்படுத்தாமல் - பேருந்தில்
ஏறினேன்
ஊர்கின்ற பேரூந்து – என்
எரிச்சலை கூட்ட – என்னை
இரு கண்கள் துளைப்பதனை உணந்து
என் பார்வையை திருப்பினேன்...
கைகொள்ளா கருமையான
வாரப்பட்ட சுருள் முடி
அழுத்தமான சிவந்த உதடுகள்
பெண்மை நிறைந்த
மான் விழிகள் - என
அழகனாய் தான் இருந்தான் - அவன்
விழியின் பார்வை மட்டும் - என்
நெஞ்சைப் பார்ப்பதாக உணர – என்னை
அறியாமல் கையால் தடவி – பின்
குனிந்து பார்த்தேன் - ஏதாவது
என் இளமை தெரிகிறதா? என....
நெரிசல் ஒரு புறம் - அவன்
குத்தும் பார்வை ஒருபுறம் - என
அவஸ்தையாயிருந்தாலும் - அவன்
அருகில் போக வேண்டும் என்ற – என்
பெண்மைக்குரிய ஆவல் மட்டும்
அடங்கவேயில்லை..
தரிப்பிடங்களை தாண்டி
குறைந்துவிட்ட சனங்களிடையே
அவனை நோக்கி
மெல்ல நகர்ந்தேன் - எனது
அலுவலக தரிப்பிடத்தினை
சமீபிக்க – என்
கால்களில் கூட – புரியாத
ஒருவித வேகம்
அப்பாடா நெருங்கி விட்டேன் - என்
இன்றைய சங்கல்ப்பம் ஈடேறப்போகிறது – அவன்
கன்னங்களில் - ஒரு கிள்ளு
கைகளில் - ஒரு முத்தம்
எப்படியோ
சாதித்துவிட்ட திருப்தியில் - பேரூந்தை
விட்டிறங்கிய பின்பும்
திரும்பிப் பார்த்தேன் - என்
மனங்கவர் கள்வனை
அப்போதும் கண்கொட்டாமல் - என்
சட்டையின் - கரு நிற
பொத்தானை பார்த்துக் கொண்டிருந்தான் - தன்
பட்டுக்கைகளை அசைத்துக்கொண்டு – அந்த
சின்னஞ்சிறு மழலை.....
மீராபாரதி
No comments:
Post a Comment