Tuesday, February 11, 2014

கழுவப்படுகின்ற அடுத்தவர் சுயங்கள்......


கிட்டடியில  எந்த சமூக ஊடகத்திலும் பதியப்படுகின்றதொரு விடயம் “இசையமைப்பாளர் யுவன் மதம் மாறிவிட்டார்” என்பது. இது பற்றி பலரும் பலவாறு விமர்சனங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிலயும் சிலதுகள் “கள்ளக்காதலி”க்காக தான் அவரு மதம் மாறினாரு என்று வேறு பதியுதுகள். இந்த பதிவ வாசித்த பின் தான் இத பற்றி நாலு வார்த்த சொல்லனும் என்டு இத நான் பதியிறன்….

இந்த மதமாற்றம் என்ற விஷயம் என்னளவில் அவரவர் மனம் சார்ந்ததொன்று என்பது என் கருத்து. நாம் சிலவேளை யாராவது ஒரு வயதானவரையோ அல்லது ஒரு தாயைப்போல நம்மை கவனிப்பவரையோ “அம்மா” என்று அழைப்பதில்லையா? அல்லது அவருக்கு தாய் ஸ்தானத்தினை அளிப்பதில்லையா? அதற்கான நாம் கட்டாயம் அவர் வயிற்றில் தான் பிறந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அது போல் தான் மதமும். எமக்கு பிடித்தால் அதை ஏற்பதில் தவறென்ன…? அதற்கு கட்டாயம் ஏதேனும் காரணம் தான் இருக்க வேண்டுமா……?
 
இதவிட முக்கியமானது ஓருவர் என்ன மதத்திலிருந்து மாறினாரோ அம் மதத்தவர் அவரை இகழ்வதும் அவர் மாறிய புதிய மதத்தவர் அவரை புகழ்வதும்….. 

ஒருவனுக்கு “மதம்” என்பது அவன் பிறப்பினால் வருவதொன்று. இந்து தாய் தந்தைக்கோ அல்லது கிறிஸ்தவ தாய் தந்தைக்கோ அல்லது வேறேதும் மத தாய் தந்தைக்கோ பிறப்பதால் தான் எமக்கு எமது பெற்றோரின் மதம் அடையாளமாக்கப்படுகிறது. இதையே நாம் வளர்ந்த பின்போ அல்லது வேறு மதங்களை புரிந்த பின்போ அல்லது வேறு மதம் எம்மை கவர்ந்த பின்போ மாற்றிக்கொள்வதில் தவறென்ன இருக்கிறது??? மதங்கள் என்பது வழிகளே அன்றி சேரும் இடம் ஒன்று தான். எந்த வழியில் போனால் என்ன அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வரை அது ஒருவரது சுதந்திரம்.

இந்து மதத்தினை விட்டு விலகி புத்தர் கட்டியவளை கைவிட்டுட்டு போதி மரத்தின் கீழ் பரிநிர்வாணம் அடைந்ததை கொண்டாடி அவர் தம் கருத்துக்களை “அஹிம்சை” வழிநடத்தல்கள் என்று பின்பற்றும் நாம் யுவனின் மதமாற்றத்தினை பற்றி அவதூறு பேசுவது ஏன்?

பொதுவாகவே நமக்கெல்லாம் இருக்கும் ஒரு பழக்கம் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்வு குறித்து விமர்சிப்பது. நம்ம பக்கத்து வீட்டு அங்கிள் ஏழெட்டு மனைவி வைத்திருப்பார்…. முன் வீட்டு ஆன்டி மதம் மாறியிருப்பா…. ஏன் நம்ம வீட்டில யாராவது கூட ராவா குடிக்கிறவங்க இருப்பாங்க… இவங்களை கேட்க நமக்கு முடியாது! ஆனா ரஹ்மான் மதம் மாறினா பிரச்சினை, யுவன் மாறினா பிரச்சினை, வாலி குடிச்சா பிரச்சினை… நம்ம கண்ணுல இருக்கிற தூசிய துடைக்க முடியல இதுக்குள்ள அடுத்தவன் கண்ண ஆராயனுமா? இதுக்கு இன்னொரு காரணமும் இருக்குங்க பக்கத்து வீட்டிலயோ இல்ல நம்ம வீட்டுலயோ சவுண்ட உயர்த்தினா பெரிய சிக்கலாயிடும் ஆனா ரஹ்மான், யுவன், வாலி எல்லாம் நம்ம பதிவ பார்க்கப்போவதும் இல்ல மறுப்பு சொல்லப் போவதும் இல்ல!!!

ஆக அமேசன் காட்டில மரம் வெட்டுறத பற்றி யோசிக்கிறம்…. நடக்கிற வழியிலுள்ள புல்ல புடுங்க முடியல என்பது தான் நிஜம். பிழை (ஒருவருக்கு பிழை என்பது இன்னொருவருக்கு சரி) விடாத மனிதன் உண்டா? அல்லது தன் இஷ்டப்படி சுதந்திரமாக வாழ முடியாதா??

ஒருவனது சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு நுனி வரை உள்ளது. அந்த சுதந்திரம் சமூகத்தினையோ அல்லது தனிமனிதனையோ பாதிக்காதவரை அவனது சுயம் பற்றி ஆராய நமக்கு என்ன தகுதியிருக்கிறது??? ஒருவரது திறமைகளை இரசிப்போம், உள்வாங்குவோம், பாராட்டுவோம்!!!

அடுத்தவர் சுயங்களை விமர்சிக்க வெளிக்கிட்டு நம் சுயங்களை தொலைக்காமல் இருந்தா சரி!! மற்றவன் சீலய வெளுக்க முதல் நம்ம உடுப்ப முதல்ல பார்க்கனும்….. அதில இருக்கிற கறைய கழுவவே நமக்கு நேரமில்ல…. இதுக்குள்ள……. தேவையா மச்சான்ஸ்???

2 comments:

  1. அன்புமிக்க சகோதரி ... கேஷாயணி அவர்களுக்கு ...
    கடந்த ஒரு வார காலமாய் யுவன் மதம் மாறியது தொடர்பாக முக நூலில் கடுமையான மதவெறி பிரச்சாரம் நடந்து வருவதை தாங்கள் அறிவீர்கள்..அதற்கு ஒரு வலுவான பதிவை எழுத வேண்டுமென்று நினத்தேன் அந்த பணியை மிக அருமையாகவும் ,தெளிவாகவும் , சாட்டை அடியாகவும் தங்களின் " கழுவப்படுகின்ற அடுத்தவர் சுயங்கள் ..! " அமைந்தது . அபாரம் அதோடு உங்களை கேட்காமல் உங்கள் இந்த பதிவை பிரித்து ஏன் சுவற்றி பதிவிட்டுவிட்டேன் ...அதற்காக என்னை மன்னிக்கவும் .... நன்றி நன்றி

    ReplyDelete
  2. நண்பரே இதற்கெல்லாம் அனுமதி கோரவேண்டியதில்லை.... உங்களுக்கு தான் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்

    ReplyDelete

அதிகம் வாசிக்கபட்டவை