Wednesday, January 8, 2014

சில கவிஞர்களும் அவர்களின் வழிஞ்சல்களும்……


முன்னர் எல்லாம் என் ஊர் பக்கத்தில் பொம்பள பிள்ளையோ அல்லது மனுஷியோ பஸ்ல ஏறினா பேரூந்து ஆசனத்தில இருக்கிற ஆம்பிளைகள் எழும்பி இடம்கொடுப்பாங்க… அதாவது மத்தப் பொண்ணுகளையும் தாயாக, தங்கையாக மதித்த காலமது….

இப்ப என் ஊர் பக்கம் மட்டுமல்ல இங்க கொழும்புல பஸ்ல ஏறினா கூட யாருமே எழும்பி இடம் தருவதில்லை. கர்ப்பிணிகளுக்கும், பௌத்த பிக்குக்களுக்கும் (இங்கு கவனிக்குக… வேறு மத தலைவர்களுக்கல்ல) மட்டும் தான் இடம் கொடுப்பாங்க… இது பெண்கள் சம உரிமை கேட்டதன் விளைவா இல்லை இப்பத்தைய ஆம்பிளைகள் பொண்ணுகள விட பலவீனமாகிட்டாங்களா என்பது விடையில்லா புதிர். இது ஒரு பக்கமிருக்க இந்த சந்துல சிந்து பாடுறவங்க சிலரும் இருக்கிறாங்க…. அதாங்க நிரம்பி வழியில பஸ்ல பொண்ணுங்களோட உரசிரதக்கென்றே வாறவங்க… அடிக்கடி தெருவில இருக்கிற சொறி நாய்கள் இப்படித்தான் சுவத்திலயும் உரஞ்சுவத பார்த்திருக்கிறன்…

இதுல இருக்கிற முக்கிய விஷயம் என்னண்டா இந்த பொம்பள பிள்ளைகயோட உரசிறது இளசுகள் என்டாலும் பரவாயில்ல… சில பழசுகள் தான் உரசுதுகள்….. இது தேவையா இதுகளுக்கு பாடையில் போற வயசுல…??? இதே போல தானுங்க இந்த சமூக ஊடகங்களிலும்….. குறிப்பா முகநூல்ல…

ஒரு வயசுல எல்லாருமே ஆணென்றால் பெண்களுடனும் பெண்களென்றால் ஆண்களுடனும் கடலை போட்டுத் தான் இருப்பம். (நானும் தான்… அவ்…அவ்) இப்படி போடாட்டி நமக்கு ஏதோ ஹோமோன் பிரச்சினை இருக்கென்று அர்த்தம். ஆனா பாருங்க சில அங்கிள்களும் சின்ன பிள்ளைகளுக்கு கடலை போடுவது தான் சகிக்க முடிவதில்லை… கல்யாணம் கட்டி நம்ம வயசுலயும் (25) பிள்ளைகள் இருக்கின்ற சில தாத்தாக்கள் பல்லில்லா காலத்தில பாக்கு சாப்பிடுற மாதிரி சட் பண்ணுதுகள்…

இதவிட கொடுமை பெண்ணின் தாய்மையை கவிதைகளில் வடிக்கின்ற சில கபோதிகளே உள்ளாள காமக்கதைகள் பேசுவது… தமது பேரப்பிள்ளைகள் வயசிருக்கும் பொண்ணுகளுக்கு இவ்வாறு செய்வது சரியா? என்னத்திற்கான வேஷம் போட வேண்டும். கவிதைகளில் பெண்மையை போற்றுவதாக மாறுவேடம் தேவையா? இதைவிட சும்மா பேத்தாமல் இருக்காலாம்.

அண்மையில் ஒரு கவிஞர் கிழசு (கிழடு + பழசு) சட்டில் வந்துச்சு… சரி என் அப்பா வயதானவர்….. நான் விரும்பி படிக்கும் கவிதைகளை படைத்த கவிஞர் என்று சட் பண்ணினால்… “கனவில் வருகின்றேனாம்… கண்ணப்பார்த்து கவிதை வருதாம்….” (கிழிஞ்சுது போது கண்ணாடியும் போட்டிருக்கன் கண்ணுக்கு தெரியலயா அங்கிள்??) இப்படியே நீளுது இவர் புலம்பல் ஆனா எனக்கே சொல்ல வெட்கம் என்பதால் நிறுத்தி விடுகின்றேன்.

உங்கள் வீட்டு பிள்ளைகள் அதாங்க உங்க மகள் பேரக்குழந்தைகளையும் நீங்கள் உங்கள் மனைவியை பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றீங்களா? மனைவியை நோக்கும் காமக்கண்ணுடன் தான் உங்கள் பிள்ளையையும் நெருங்குவீர்களா? உங்கள் பிள்ளைக்கு கொடுக்கும் முத்தத்தில் காமம் இருக்குமா?

ஒருவனது படைப்புக்கள் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்” என்ட மாதிரி இருக்க கூடாதுங்க. நல்லவனாக இருங்கள் அல்லது ரௌடியாகவே இருந்திட்டு போங்கள்… ஆனால் நடிக்காதீர்கள்.

சமூக ஊடகம் என்பது நம்மை விருத்தி செய்து கொள்வதற்கான தளமேயன்றி உங்க லீலைகளுக்கான உள்ளரங்கம் அல்ல… உடுப்பு போட்டா மட்டும் மனுஷன் ஆகிட முடியாது கொஞ்சம் மானம் இருக்கனுங்க… அது தான் மரியாதை!!!

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை