Thursday, January 2, 2014

காதலித்தால் மட்டுமா கவித வரும்….??


என் நண்பர் ஒருவர் கவிதை, இசையில் மிகுந்த ஆர்வமுடையவர். விரைவில் கவிதையாசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை இடம்பெறவுள்ளது குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும் போது “நீங்களும் பங்குபற்றலாமே…?” என்று கேட்டுவிட்டேன். (இன்னம் இந்த முந்திரிக்கொட்டை தனம் குறையல) சிரித்த படியே “ எனக்கு கவிதையெல்லாம் வராது… அது ஒரு காலம். காதலித்த போது எழுதியிருக்கன்…. இப்பெல்லாம் வராது… காதலிக்கும் போது தான் கவிதை வரும்” என்றாரே பார்க்கலாம்…..

“எனக்கு கவித வராது" என்று சொன்னது ஓகே…. “காதலித்த போது எழுதியிருக்கன்” …. இது ஓகே….. "இப்பெல்லாம் வராது"…. இதுவும் ஓகே… அதென்ன “காதலிக்கும் போது தான் கவிதை வரும்’???
ஆக காதலிக்கும் ஒருவருக்கு தான் கவி வருமா? இதென்னங்க நியாயம்?

முதலாவது வினா காதலிக்காத மனிதன் உண்டா? நிச்சயம் காதலிக்காதவன் மனிதனாக இருக்க முடியாது.  அப்படியென்றால் எல்லோரும் கவிஞர்களாக மாறியிருக்கனுமே....

இரண்டாவது விடயம் காதல் என்பது எதிர்பாலானவர்களிடம் மட்டும் தோன்றும் ஓர் உணர்வா? இல்லை என்பது என் வாதம். காதல் என்பது இசையில் ஏற்படலாம், இயற்கையில் ஏற்படலாம், இறைவனிடம் ஏற்படலாம்… ஏன் எம் பணிகளில் கூட ஏற்படலாம். ஆக காதல் பலவகைப்படும் போது ஏன் கவிதை என்றாலே ஆண் - பெண் உறவை குறித்தானது என்று மட்டும் நினைக்க வேண்டும்….?

கவிதை என்பது காதலிப்பவர்கள் காதலிக்காதவர்கள் என்று பார்த்து வருவதில்லை….ஆனால் காதலிப்பவர்கள் தான் கவி எழுத முடியும் என்பது ஒரு வகையில் உண்மை… ஆனால் அது பாலுறவுக் காதல் மட்டுமல்ல…. நினைப்பதை, உணர்வதை, அனுபவிப்பதை வரிகளில் வடிக்கத் தெரிந்த எவராலும் கவி படைத்திட முடியுமுங்க….

கட்டாயம் வலையில் (அது தாங்க இந்த பாலாய் போன ஆண் பெண் காதல்) மாட்டியிருக்கும் போது தான் கவித எழுத வேண்டும் என்பதில்லை…. எதிர்பாலாரினை காதலிக்கும் போதும் சரி பின்னர் தோற்று விட்டு தலையணையை கண்ணீரால் நனைக்கும் போதும் சரி ஆண் என்றால் கண்ணீரல்ல தண்ணீர் (பியர்)….. தாடி என்று அலையும் போதும் சரி வரும் கவிகள் அந்த நிமிட வலியை குறைப்பவையே… அதற்காக அவை மட்டுமே கவியாகிடாது!!!


பாலின காதலின் மீது பழிபோட்டு உங்கள் திறமைகளை மழுங்கடித்துக்கொள்ளாதீர்கள்...... !!!



No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை