Tuesday, September 3, 2013

மௌன நிமிடங்கள் அழகானவை





உணர்வுகளை கொல்லும்
உறவுகளை விட
ஊமைக் கணங்கள்
அர்த்தமானவை!
பாசங்கள் எல்லாம்
வேஷங்கள் ஆகி
புனிதங்கள் புதைவதை விடவும்
பொய்யான சிரிப்புகள்
புறமுதுகின் குத்தல்கள்
பழி தீர்க்கும் நட்புகள் - அது
கொடுக்கும் கண்ணீர் துளிகள்
இவைகளை விடவும்
புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கின்றது……. - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!

இப்போதெல்லாம்
எதிர்பார்ப்புகளை தொலைவிட்டேன்
ஏமாற்றங்கள் பழக்கமாகி விட்டன
இவையாவும் - என்
நாட்குறிப்பின் வெறும்
புள்ளிகளே இன்று….  -
புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கிறது - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!!!

மீண்டும் என்
வார்த்தைகளை தேடாதீர்கள்…
மீண்டாலும் அவற்றுள்
உயிர்ப்பிருக்கப் போவதில்லை
நீண்டாலும் அதில்
உணர்விருக்கப் போவதில்லை
கானல் நீரை விடவும்
காணாமல் இருப்பது நன்று…
என் புன்னகைக்காக
ஏங்குவதாக புழுகாதீர்கள்
புண்களை மறைத்து
நகைப்பதை விட
பூசிமெழுகி நடிப்பதை விட
புன்முறுவல் தொலைத்த – என்
உதட்டசைவுகள் போதுமானவை!!
எனக்கு புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கிறது - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!!!












2 comments:

  1. தோழிக்கு வணக்கம்!
    கவிதை வாசித்து மகிழ்ந்தேன்.
    தங்களின் மனவுணர்வுக் குவியலில் ஒரு துளி அள்ளி கவியாக்கி அளித்தமைக்கு நன்றி.
    முனைவர் ப. சரவணன்

    ReplyDelete
  2. தங்கள் கருத்தினை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete

அதிகம் வாசிக்கபட்டவை