Sunday, November 17, 2013

அஸ்வர் எம்பியும் ஆவேஷப்பேச்சும்…… 15.11.2013


ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த வேளை பின்னால் நின்று கொண்டிருந்த அஸ்வர் எம்பி அவர்கள் திடீரென கடுப்பாகி கத்தத்தொடங்கினார்….

வடக்கின் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசுகிறீர்கள்…. ஏன் சனல் 4 கூட இது தொடர்பான ஆவணப்படங்களை வெளியிடுகிறது… ஏன் முஸ்லீம்கள் பற்றி பேசக்கூடாது? முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் இரவோடிரவாக வெளியேற்றினார்கள். அதைப்பற்றி ஏன் பேசுவதில்லை… கிழக்கில் பல முஸ்லீம்களை வெட்டிச்சாய்த்தார்கள் அவர்கள் பற்றி ஏன் காட்சிப்படுத்தவில்லை. புலம்பெயர்ந்தவர்கள் சிலர் தான் இதை பின்னிருந்து இயக்குகிறார்கள்… இந்த மனித உரிமை பற்றி யார் கேட்கிறார்கள்?..... இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எல்லாவித சுதந்திரமும் இருக்கிறது……..” என்பதாக அமைந்திருந்தது. (இன்னும் இருக்கிறது அதை ஒலிவடிவில் இணைத்துள்ளேன்..ஆனால் இந்த ஒலிப்பதிவு ஊடக அமர்வுக்கு முன் கொடுத்த பேட்டியில் கிடைத்தது. இதே விடயத்தினை தான் ஆவேசமாக ஊடகவியலார் சந்திப்பில் தெரிவித்தார்)
இல்லை தெரியாமல் தான் கேட்கின்றேன் “புலிகள் ஏன் உங்களை வெளியேற்றினார்கள்?” சும்மா ஒருவரை துரத்த அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இல்லையென்றால் உங்களுடன் தனிப்பட்ட விரோதங்கள் ஏதும் இருந்ததா? அதற்காக விடுதலைப்புலிகள் செய்தது முற்றுமுழுதாக சரியென வாதிடவும் நான் தயாரில்லை….

நீங்கள் முதலில் பக்கத்திலைக்கு பாயசம் கேட்பதை நிறுத்துங்கள். உங்கள் இனத்திற்காக நீங்கள் தான் போராட வேண்டும். தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் பற்றி பேசும் நீங்கள் அவர் புலம்பெயர காரணமாயிருந்த அழுத்தங்கள் குறித்து சிந்தித்ததுண்டா? உள்நாட்டில் இடம்பெயர்ந்த உங்களுக்கு இவ்வளவு வலியிருக்கும் போது மண்ணை விட்டு தம் உறவுகளை விட்டு போய்விட்ட தமிழர்கள் குறித்தும், அவர்கள் கேட்கும் நீதி குறித்தும் விமர்சிக்க முடிகிறது பெரும் ஆச்சர்யமே. தமிழர்கள் முஸ்லீம்கள் குறித்து பேசாமை பற்றி குறிப்பிடும் நீங்கள் ஏன் தமிழர்களுக்காக நீதி கேட்கக்கூடாது???

சனல்4 இன் ஆவணப்படங்கள் குறித்தும் அவர்கள் தமிழர்கள் பிரச்சினை  மட்டும் பேசியதாக குற்றம் சாட்டுவதும் குறித்து குறிப்பிடும் நீங்கள் சனல்4 எதை காட்டியது என்று அமர்ந்து பார்த்தீர்களா? “ அதில் குற்றமறியாத சிறுவனை கொன்றது குறித்தும் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியது குறித்தும் காட்டப்பட்டது உங்கள் கண்ணுக்கு காட்சியாகவில்லையா?”

புலிகள் உங்களை வெளியேற்றினார்கள் என்று சொல்லும் நீங்கள் புலிகள் எப்போதாவது தனிப்பட்ட ரீதியில் சிறுவர்களை கொன்றார்கள் என்றோ அல்லது ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தினார்கள் என்றோ ஆதாரத்துடன் நிரூபிப்பீர்களா?

இதை தமிழ் முஸ்லீம் என பிரித்துப்பார்க்காமல் சிறுபான்மையினருக்கான பிரச்சினை என்ற ரீதியில் நோக்கில் நல்லது.

தமிழர் போராட்டம் பற்றி விமர்சிக்கும் போது ஒன்றை மட்டும் நினைவில் இருத்த வேண்டும். சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழர் மீதிருந்த பயம் தான் தமிழர்களின் இனவழிப்புக்கு வழிகோலியது. அதே பயம் அடுத்த சிறுபான்மை முஸ்லீம்களிடம் திரும்பும் போது பல இசைப்பிரியாக்கள் பல பாலசந்திரன்கள் முஸ்லீம் சமூகத்தில் தோன்றலாம்.  அப்போது சனல்4 மட்டுமல்ல சனல்1,2,3….. கூட ஆவணங்கள் தயாரிக்கும் இது குறித்து.....

பாடசாலைக்காலங்களில் சில மாணவர்கள் தமக்கு மாணவர் தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக சில “சின்னப்புள்ளத்தனமான” வேலைகளை செய்வதுண்டு. அப்படித்தானுங்கோ நமது சில அரச தலைவர்களும்….. சில வேளை தம்மை மறந்து சின்னப்புள்ளத்தனமாக நடப்பதுண்டு. அதைப் போன்று தானிருக்கிறது இவரது செய்கையும்…. இவரது ஆவேசப்பேச்சை பார்த்து ஊடகவியலாளர் சந்திப்பின் அன்றைய தின ஒருங்கிணைப்பாளர் உக்கு அவர்கள்Please learn civil manners….” என்று சொல்லுமளவுக்கு கீழ்தரமாக அமைந்திருந்தது. இது ஒன்றே போதும் இலங்கை தலைவர்களை மட்டுக்கட்டுவதற்கு……

CHOGM இன் சோகங்கள் தொடரும்....................







1 comment:

  1. உன்மையை ,இலாவகரமாக சொல்லி இருக்கிறீா்கள்

    ReplyDelete

அதிகம் வாசிக்கபட்டவை