பொதுவாகவே பருவ வயதில் அனைவருக்குமே தோன்றும் இயல்பான உணர்வுகளே இவை. எதிர்பாலாரிடம் எமக்கு இவ்வாறான உணர்வுகள் தோன்றுகின்றன. இவற்றினை நாம் எவ்வாறு கையாள்கின்றோம் என்பதில் தான் இவற்றின் வெற்றி தங்கியிருக்கின்றது இவற்றிற்கான ஆயுளும் தங்கியிருக்கின்றது. அதிலும் இன்றைய சினிமா மற்றும் பொழுது போக்கு ஊடகங்களும் இவற்றிற்கான அடிப்படைகளை அமைத்து கொடுக்கின்றன.
ஒரு பெண்ணைப்பார்க்கின்றோம் அவளுடைய ஏதோவொன்று எம்மைக் கவர்கின்றது அவளுடனான தொடர்பை ஏற்படுத்துவோ அல்லது அதனை வலுப்படுத்தவோ அடிக்கடி கதைக்கின்றோhம் அல்லது நம் பக்கம் அவள் கவனத்தினை திருப்ப முயற்சிக்கின்றோம் அதேவேளை இன்னொரு பெண்ணைக்காணும் போது முன்னவளுடனான உறவைக் குறைக்கவோ அல்லது அவளில் குறை கண்டுபிடித்து உறவை கழற்றிவிடவோ முயற்சிக்கின்றோம். அதுவும் எப்படியென்றால் அவளுக்கு இன்னொருவனுடன் உறவு இருப்பதாக கற்பனைக் கதைகளையோ அல்லது அவள் நம்மிலும் தகுதியில் உயர்ந்தவனை தான் விரும்புகிறாள் என்றோ நம்மைப் போலவே அடுத்தவர்களையும் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம் அவ்வாறான கவாச்சிகளும் இதன் விளைவுகளையும் பழகத் தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே உணரலாம் அல்லது உண்மைச் சாயம் வெளுக்கத்தொடங்கும். ஒருவரால் நீண்ட காலத்திற்கு நல்லவராக நடிப்பதென்பது கடினம். இந்த கவர்ச்சிகளை நம்பி பெண்களே உங்கள் குடும்ப பெயர், படிப்பு என்பவற்றினை இழந்து விடாதீர்கள். எதுவுத் குறுகிய காலத்தில் வருகிறதென்றால் மீண்டும் குறுகிய காலத்திலேயே சென்று விடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். “மணலில் எழுதுவது எளிது ஆனால் விரைவில் அழிந்து விடும். பாறையில் எழுத அதிக நேரமெடுக்கும் ஆனால் காலங்காலமாக நிலைத்திருக்கும்.”
அடுத்தது நட்பு. இன்று மெல்ல மெல்ல ஆண் - பெண் நட்பினை சமூகம் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. நட்பு என்பது தூய்மையான ஒரு விடயம். பெற்றோரிடமோ அல்லது சகோதரங்களிடமோ சொல்லத் தோன்றாத எத்தனையோ விடயங்களை நண்பர்களிடம் தான் சொல்லத் தோன்றும். அதற்காக அந்த நண்பர்கள் நம் வாழ்நாள் முழுவதும் எம்முடன் வரவேண்டுமென நினைப்பதும் நமது நண்பியுடன் இன்னொருவரை இணைத்துக்கதைப்பதும் அபர்த்தமான விடயம். நுண்பர்களை தெரிவு செய்யும் போது நல்லவராக தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்து பழகிக் கொண்டே கெட்டவள் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு மறுபுறம் அவளுடன் உறவாடாதீர்கள். அதற்கு சமூக ஊடக காலமிது எல்லோரும் நண்பர்கள் என்று கதையளக்காதீர்கள். ஆண் என்பதால் எவ்வாறும் நடக்கலாம் நமக்கு நல்லதை கணிக்க தெரியும் பெண்ணென்றால் “முள் மேல் சேலை” என்று சிந்திக்க வேண்டுமென்று நியாயப்படுத்தாதீர்கள் “நண்பனை வைத்துத் தான் நம்மையும் கணிப்பார்கள்” இது ஆண் - பெண் இருபாலாருக்கும் பொருந்தும்
இறுதியானது காதல் சில வேளைகளில் புரிந்துணர்வு நிறைந்த நட்புகள் காதலாக மாறுவதுண்டு இவ்வாறானவை வரவேற்கத்தக்க விடயங்களும் கூட அதுவும் அவள் காதலில் தோற்றுவிட்ட பெண்னென்று தெரிந்த பின்பும் குறுகிய காலத்தில் நமது காதலை ஏற்கவில்லையே என நினைத்து அவளை சந்தேகப்படுவதும் வார்த்தைகளினால் கொல்வதும் நமது அன்பையே கொச்சைப்படுத்திவிடும். பெண்களில் பலவகையுண்டு பலர் பலவித தேவைகளுக்காகவும் காதலிக்கின்றார்கள். ஆனால் நல்லதொரு குடும்பத்திலிருந்து வந்த மென்மையான உணர்வுகளைக்கொண்ட பெண்னென்றால் தனக்கு வரப்போகிறவரிடமிருந்து அன்பையும் பாதுகாப்பையும் நம்பிக்கையினையும் எதிர்பார்ப்பாள். மீண்டும் ஒருவரில் நம்பிக்கையினை பெறுவதற்கு சற்று நீண்ட காலம் எடுக்கலாம். அவள் காலம் தாமதிக்கும் போது அவள் ஏற்கவில்லை என்பதற்காக அவளை தவிர்க்க நினைப்பதும் குறைகளை கண்டுபிடிப்பதும் “உனக்கு ஈகோ” என்று கூறுவதும் நல்லதல்ல. எல்லோராலும் இலகுவில் ஒன்றை பிரதிபண்ண முடியாது. ஆனால் காலம் தாமதித்த எடுக்கும் முடிவுகள் சீரானதாக அமையும் என்பதை மறக்கக்கூடாது. நமது அன்பையும் . அக்கறையையும் தொடர்ந்தளிப்பதன் மூலம் நம்பிக்கையினை ஏற்படுத்த முயல வேண்டும். என்றொவொரு நாள் உங்கள் அன்பு அப்பெண்ணின் மனதை தொடும் உங்களில் ஏற்படுகின்ற நம்பிக்கை உங்கள் தோளில் சாயவைக்கும்.
எவருக்கும் தம் காதலில் தோற்கும் போது உடனடியாக இன்னொரு காதலில் ஈடுபட தோன்றும். நம்மிடம் புதிதாக காதலை தெரிவிப்பவர்கள் அருகில் போய் நிற்கத் தோன்றும். காதலை மறுத்து நட்புகள் பிரியும் போது மிகவும் வலிக்கும் ஏன் நம்மை நேசித்த ஒருவர் இன்nனொரு பெண்ணை பற்றி கதைக்கும் போது பொறாமைப்பட தோன்றும். அதையும் தாண்டி ஒரு இளவயது பெண் மறுக்கின்றாள் என்றால் எவ்வளவு வலிகள் இருக்கும் என யோசித்துப்பாருங்கள். ஏன் என்றால் வலிகளை நினைக்கும் போது மனம்; சுவரில் அடிபட்ட பந்தாக மீண்டுவிடும் என்பதால் தான். “ எவரும் தோற்றுவிடுவோம் என நினைத்து காதலிப்பதில்லை ஆனால் தோற்றுவிட்டால் காதலை மறுபடி நினைப்பதுமில்லை.” (இது உண்மையாக நேர்மையாக காதலித்து தோற்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.பலருடனும் நட்பு என்ற பெயரில் நேரம் கடத்தி கடலை போடுபவர்களுக்கல்ல அதன் பின் கழற்றிவிடும் போது “நட்பு” பற்றி வரைவிலக்கணம் படிப்பவர்களுக்கும் அல்ல)
உங்கள் காதல் உண்மையானது என்றால் மாற்றத்திற்காக காத்திருங்கள். தொடர்ந்தும் அன்பு செய்யுங்கள். “உண்மைக்காதல் என்றும் தோற்பதில்லை காதலிப்பவர்களை தெரிவு செய்வதில் தான் தோற்கின்றோம்”. எமக்கு கிடைக்கவில்லை என்பதற்காக பழிவாங்காதீர்கள். வார்த்தைகளால் வதைக்காதீர்கள் காத்திருங்கள் காலம் பதில் சொல்லும்.
வணக்கம் மீராபாரதி
ReplyDeleteஎன்னை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.ஆனால் உங்களை எனக்கு நன்றாகவே தெரியும்.ஆக்கங்கள் மிக அருமை தொடருங்கள்
ஆனால் இந்த ஆக்கத்தில் சில கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள வேண்டியவைகள் தாம். ஆனால் அவற்றில் முழுவதுமாக ஆண்களை மட்டும் தவறானவர்களாக எல்லா பெண்ணியம் பேசும் பெண்களும் காட்டுவது ஏதற்காக உங்கள் கருத்துகளுக்கு வலுச்சேட்பதர்க்காகவா...ஏன் நீங்கள் பெண்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில்லை மறந்துவிடுகிறீர்களா இல்லை மறைத்து விடுகிறீர்களா. காதல் நிற்ச்சயமாக ஒரு எதிர்பார்ப்பிலேயே உருவாகிறது இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணிற்கும் பொருந்தும். ஒரு பெண்ணை ஆண் காதலிக்கும் போதோ ஒரு ஆணை பெண் காதலிக்கும் போதோ அவர்களை தத்தம் பக்கம் திருப்புவது வழமை,இயற்கை அதை விடுத்து
தன் நண்பர்களிடம் அல்லது நண்பிகளிடம் தான் இன்னாரை காதலிக்கிறேன் என்று சொன்னால் அக்காதல் உண்மையாகிவிடுமா ....?(நீண்டகாலகேள்வி )
""அதுவும் எப்படியென்றால் அவளுக்கு இன்னொருவனுடன் உறவு இருப்பதாக கற்பனைக் கதைகளையோ அல்லது அவள் நம்மிலும் தகுதியில் உயர்ந்தவனை தான் விரும்புகிறாள் என்றோ நம்மைப் போலவே அடுத்தவர்களையும் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம்""
இதன் மூலம் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்...
மேலே கூறிய வசனத்தை அந்த ஆடவன் அல்லது பெண் தான் காதலிப்பவரை பற்றி அறியாமல் வதந்தியாக பரப்பினால் நிச்சயமாக அது கண்டிக்கப்பட வேண்டியது.ஆனால் தனக்குள்ளேயே
சிந்திப்பது எவ்வகையில் குற்றம் (இது மனோதத்துவ ரீதியில் CB(Cognitive Behavior)) எனப்படும்.இது எல்லா மனிதரிலும் சாதாரணமாக காணப்படுவது.
ஆகவே ஒரு ஆடவன் அந்த குறிப்பிட்ட பெண் தனக்கு சாதகமான பதில் தரவில்லை என்று மேற்குறிப்பிட்டவாறு சிந்தித்து விலகிவிடுவது
சிறந்ததா அல்லது அந்த பெண்ணை தொடர்ந்து சங்கடத்துக்குள்ளாக்குவதுடன் தானும் சங்கடப்படுவது சிறந்ததா ....? அப்படியும் அந்த பெண் பதில் தராவிட்டால் அவன் இழந்த ஒவ்வொரு மணித்துளிகளிற்கும் தவறவிட்ட கடமைகளிட்கும் யார் பதில் சொல்வது...பெண்ணை தவறவிட்டதற்கு
பதில் பொன்னை தவறவிட்டவனாக மாறிவிடுவானே,காலம் பொன்னானது அல்லவா.
காதலுக்காக நாம் காத்திருக்கலாம்...ஆனால் காலம் நமக்காக காத்திருப்பதில்லையே......
வணக்கம் அண்ணா உங்களிடமிருந்து இவ்வாறான கருத்துக்கள் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி. கூடவே "பாரதி" என்பதை விட்டு தங்கச்சி என்றழைத்திருந்தால் கூடுதலாக மகிழ்ந்திருப்பேன்.ஒரே குடும்பத்தில் இருந்து கொண்டு இவ்வாறான கருத்தாடல்கள் இடம்பெறுவதும் வரவேற்கத்தக்கது. இங்கு என் அண்ணாவிற்கான பதிலாக இல்லாது வாசகனுக்கான பதிலை முன்வைக்கவே விரும்புகின்றேன்.
ReplyDeleteநான் இங்கே பெண்ணியம் பேச வரவில்லை பொதுவாக பாதிப்புக்கள் பெண்களுக்கானது என்பதைத் தான் முன்வைக்க விரும்புகின்றேன்.ஒரு பெண் தவறும் போது கண்டிக்கின்ற சமூகம் ஒரு ஆண் தவறும் போது அதை நியாயப்படுத்துகின்றது. தோற்றுவிட்ட ஆண்கள் குடிக்கின்றார்கள் அல்து தாடி வளர்க்கின்றார்கள் இறுதியில் வேறு பெண்ணை பார்க்கின்றார்கள.தோற்றுவிட்ட ஆண்கள் குடிக்கின்றார்கள் அல்து தாடி வளர்க்கின்றார்கள் இறுதியில் வேறு பெண்ணை பார்க்கின்றார்கள.மறு காதல் வருவேற்கத்தக்க விடயம் தான் ஆயினும் அதை ஒரு பெண்ணிடம் சொல்லும் போது வலிகள் மாறி அவள் சம்மதிக்கும் வரை காத்ருக்க வேண்டும்.அவளது மௌனத்தினை திமிர் என்றோ ஈகோ என்றோ பொருள் கொள்ளக் கூடாது அதுவும் நேரடியாக அவளிடமே கூறுவது அநாகரிகம் அது நிச்சயம் மீண்டும் அவளை சுருங்கிக் கொள்ள சேய்யுமே ஒழியமீண்டும் காதலிக்க தூண்டாது
காத்திருக்கும் போது அது அவளுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தும். நேரம் பொன்னானது தான் நம்மவர்களுக்காக காத்திருக்கும் போது அதுவே வைரமாக மாறும்.காதலில் காத்திருப்பும் அழகானதே
இது எனது தனிப்பட்ட வாழ்வின் அனுபவமும் கூட எனக்காக ஒருவன் காத்திருந்தால் அவன் என்னை புரிந்துகொண்டு உண்மையாக நேசித்தால் நிச்சயம் நானும் எனது முடிவை கல்லின் செதுக்குவேன்.
வணக்கம் பாரதி
ReplyDeleteநானும் உங்களிடம் ஒரு கருத்தாளரின் பதிலையே எதிர்பார்க்கிறேன் அன்றி தங்கையின் பதிலை அல்ல .நீங்கள் பெண்ணியம் பேசவில்லையாயினும்
உங்கள் கருத்தில் ஆண்களின் நிலைமைகள் ஒப்புநோக்கப்படவில்லையே
சமூகம் நிச்சயமாக தவறும் எந்த ஆணையும் நியாயப்படுத்துவதில்லை
அப்படி செய்யவும் முடியாது. ஆனால் ஒருவன் காதலுக்காக எல்லாவற்றையும் இழந்து நிற்க்கும் போது அவனை பார்த்து நகைக்கிறதேயன்றி அவனைப்பார்த்து பெருமிதப்படுவதுமில்லை ,அவனுக்கு தியாகிப்பட்டமும் வழங்குவதில்லை
ஒரு ஆண் குடித்தாலோ அல்லது தாடி வளர்த்தாலோ உடனே காதல் தோல்வி என்று வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடும் பழக்கம் இன்னும் குறையவில்லை.ஏன் தோற்ற பெண்கள் எல்லாம் கன்னியாஸ்திரிகளாகவும்
திருமணம் செய்யாதவர்களாகவுமா உள்ளனர்.முக்கால்வாசி பேர் இன்னொருவனை மணந்து பிள்ளை குட்டி பெற்று வாழவில்லையா
அன்புத்தங்கையே இங்கே யாரும் யாருக்காகவும் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை காரணம் இந்தஉலகத்தில் ஆணுக்கும் குறைவில்லை பெண்ணுக்கும் குறைவில்லை
மற்றும் ஆணிற்கு பெண்ணும் பெண்ணிற்கு ஆணும் அத்தியாவசியமானவர்கள் இல்லையே(ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை உணவு,உடை ,உறையுள் தவிர்த்து ஆணிற்க்கு பெண் என்றும் பெண்ணிற்கு ஆண் என்றும் எங்கேயாவது உள்ளதா ).
பெண்ணில்லாமல் சாதித்த எத்தனையோ ஆண்களும்(பாரத ரத்னா டாக்.அப்துல் கலாம் ), ஆணில்லாமல் சாதித்த எத்தனையோ பெண்களும் இந்த உலகத்தில் தானே இருக்கிறார்கள்.உலகத்தையே தம்மை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்த அநேகர் காதலிட்க்கு பின் ஓடியவர்கள் அல்ல அவர்கள் காலத்திற்கு முன் ஓடியவர்கள்
காத்திருப்பதும்,கற்பனையில் மிதப்பதும் காலத்தை கடத்துவது மட்டுமல்லாமல் நம்மை நாமே ஏமாற்றும் ஒரு செயல்
"நேரம் பொன்னானது தான் நம்மவர்களுக்காக காத்திருக்கும் போது அதுவே வைரமாக மாறும்"
ஆம் நாளை அவள்/அவன் இன்னொருவருடன் நம்முன் வரும்போது அதே வைரம் கரித்துண்டாக மாறியிருக்கும்(இரண்டுமே Carbon தானே )
வணக்கம் அண்ணா
ReplyDeleteகாதல் தோல்வி தான் குடிப்பதற்கு காரணம் என்று நான் கூறவில்லை எத்தனையோ ஆண் கவிஞர்களது கவிதைகளில் தான் பார்த்திருக்கின்றேன்.அடுத்தது அநேகமாக சமூகத்தில் ஒரு பெண் ஆணின் பழைய காதலை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு ஒரு ஆணிணால் பெண்ணின் பழைய காதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இது உளவியல் உண்மையும் கூட அடுத்தவர்கள் தரப்போகும் பட்டங்களுக்காக தான் காத்திருக்க நினைத்தால் தியாகங்களும் காத்திருப்புகளும் அர்த்தமற்றதாகிவிடும்
ஒருவேளை ஆணுக்கோ பெண்ணுக்கோ குறைவில்லாமல் இருக்கலாம் ஆனால் எல்லோரிடமம் நம் மனம் மண்டியிடுவதில்லையே ... ? அப்படியிட்டால் அது காதலும் அல்ல.