காவியங்களாகின்றன -சில காதல்கள்
வரலாறாகின்றன - சில காதல்கள்
அழியா படைப்புகளாகின்றன – சில காதல்கள்
பந்த பாசங்களை பகைக்கின்றது
சாதி மதங்களை இணைக்கிறது
பத்தினிகளை படிதாண்ட வைக்கிறது – ஏன்
தற்கொலைகளில் கூட முடிகிறது - இந்த காதல்
ஒருவனை ஞானியாக்குகிறது
ஒருவனை கவிஞனாக்குகிறது
குடிகாரனாக்குகிறது...
கொலைகாரனாக்குகின்றது....
ஆனால்....
முகம் பார்க்காத
பதவி கேட்காத
பணம் தேடாத – இதுரை
சொல்வதற்கு கூட தைரியம் தராத
மனதில் பூட்டி வைத்த - என்
ஒரு தலைக்காதல் மட்டும் - என்னை
தலையசைக்க வைத்துள்ளது
திருமணத்திற்கு.... - என்னவன்
இன்னொருத்திக்கு சொந்தமானவன் - என
அறிந்த போது..
No comments:
Post a Comment